உச்சிஷ்ட கணபதி கோவில் வருசாபிஷேகம்
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிலில் வருசாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிலில் வருசாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
உச்சிஷ்ட கணபதி
நெல்லை சந்திப்பு மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிலில் நேற்று வருசாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை் நடந்தது. 10.30 மணிக்கு விமானம் மற்றும் உச்சிஷ்ட கணபதிக்கு வருசாபிஷேகமும், சிறப்பு மகா அபிஷேகமும் நடைபெற்றது. 12 மணிக்கு மகா தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. இதைத்தொடர்ந்து 16 விநாயகர்களுக்கு பக்தர்கள் கையாலேயே சங்காபிஷேகம், இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விக்ன விநாயகர்
இதேபோல் பாளையங்கோட்டை தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோவிலில் நேற்று வருசாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கும்ப பூஜை, சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, காலை 10.35 மணிக்கு கலசாபிஷேகம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும், விநாயகமூர்த்தி திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வரசித்தி விநாயகர்
பாளையங்கோட்ைட மகாராஜநகர் இ.பி. காலனியில் உள்ள வரசித்தி விநாயகர், மகாலிங்கேஸ்வரர் கோவிலில் வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி அனுக்ஞை, கும்பபூைஜ, மகாகணபதி ஹோமம், ருத்ர ஹோமம், மகா பூர்ணாகுதி நடத்தப்பட்டு காலை 8 மணிக்கு மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு அபிஷேகம், 8.50 மணிக்கு விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை, இரவில் புஷ்பாஞ்சலி, உற்சவ விநாயகர் கோவிலை வலம் வருதல் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.