தமிழகத்தில் புதிய முறைப்படி தட்டச்சு தேர்வு நடத்த வேண்டும் - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

தமிழகத்தில் தட்டச்சு தேர்வை புதிய முறைப்படி நடத்த வேண்டும் என ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-20 16:58 GMT

மதுரை,

தமிழ்நாடு தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கம்யூட்டர் பயிற்சி பள்ளிகள் சங்கத் தலைவர் சோமசங்கர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், தமிழகத்தில் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வு என 2 நிலைகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெறும். இரு தேர்வுகளும் தாள்-1, தாள்-2 என இரண்டு நிலைகளில் நடைபெறும்.

இளநிலை தட்டச்சு தேர்வில் தாள்-1 ஸ்பீடு, தாள் - 2 ஸ்டேட்மென்ட், லெட்டர் டைப்பிங் ஆக இருக்கும். அவற்றை குறிப்பிட்ட நேரத்தில் தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும். கடந்த 75 ஆண்டுகளாக இந்த முறையில்தான் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போதைய தேர்வு அறிவிப்பில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில் தாள்-1 லெட்டர், ஸ்டெட்மெண்ட் என்றும், தாள்-2 ஸ்பீடு என கூறப்பட்டுள்ளது. இந்த முறையை ரத்து செய்து 75 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் முறைப்படியே இளநிலை, முதுநிலை தட்டச்சு தேர்வு நடைபெற உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்து, ஏற்கெனவே நடைமுறையில் இருந்து முறைப்படியே தட்டச்சு தேர்வுகள் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளை மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு

ஏற்கெனவே நடைமுறையில் இருந்து முறைப்படியே தட்டச்சு தேர்வுகள் நடைபெற வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், தமிழகத்தில் தட்டச்சு தேர்வை புதிய முறைப்படி தாள்-1 லெட்டர், ஸ்டெட்மெண்ட் என்றும், தாள்-2 ஸ்பீடு இருக்கும் வகையில் நடத்த வேண்டும்.

மேலும், நவம்பர் 13-ந் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க தொழில் நுட்ப கல்வி இயக்ககத்திற்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்