இருசக்கர வாகனம், சோபா செட் தருவதாக மோசடி- 3 பேர் மீது வழக்கு
இருசக்கர வாகனம், சோபா செட் தருவதாக மோசடி செய்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது;
பேரையூர்
பேரையூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 67). இவர் ஓசூர் அத்திப்பட்டுவில் உள்ள கம்பெனி ஒன்றில் கியாஸ் ஸ்டவ் வாங்கியுள்ளார். இதைதொடர்ந்து அந்தக் கம்பெனியை சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனம் மற்றும் சோபா செட் தருவதாகவும் அதற்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறினர். ராமசாமியும் ரூ.74 ஆயிரத்தை வங்கி கணக்கு மூலமாக அனுப்பி உள்ளார். பணம் அனுப்பி ஒரு மாதமாகியும் பொருட்கள் வரவில்லை. இதுகுறித்து ராமசாமி பேரையூர் போலீசில் புகார் செய்தார். ஓசூர் அத்திப்பட்டுவை சேர்ந்த செல்வ முனிரத்தினம், ஹரிகிருஷ்ணன், தேனி தேவனாம்பட்டியை சேர்ந்த சிவரஞ்சனி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.