போலீஸ்காரர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது
போலீஸ்காரர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது
திருப்பூர்,
திருப்பூரில் 17 வயது சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து சிறுமியின் காதலன் மற்றும் சிறுமிக்கு ப ாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் ஆகியோரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:-
சிறுமி கர்ப்பம்
திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுமி கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறாள். சிறுமிக்கு வயிற்றுவலி இருந்துள்ளது. பெற்றோரிடம் கூற மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்தபோது சிறுமி 7 மாதமாக கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. நெல்லை கீழபுதூரை சேர்ந்த மாரிசெல்வம் (வயது 25) என்பவர் திருப்பூரில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். மாரிசெல்வமும், அந்த சிறுமியும் கடந்த4 ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 7 மாதத்துக்கு முன் திருமணம் செய்வதாக கூறி மாரிசெல்வம் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதுஒருபுறம் இருக்க, சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த யுவராஜா (36) என்பவரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிகிறது. யுவராஜா திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது
பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவின் பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போக்சோ வழக்குப்பதிவு செய்து மாரிசெல்வம், யுவராஜா ஆகிய 2 பேரையும் வடக்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தார். போக்சோ வழக்கில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
----