தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-06-13 18:57 GMT

திருச்சி, ஜூன்.14-

வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

சுமை தூக்கும் தொழிலாளி

திருச்சி வரகனேரி பிச்சைநகரை சேர்ந்தவர் லோகநாதன் என்கிற டான் (வயது 35). இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். லோகநாதன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.

இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் வீட்டில் யாரும் இல்லாதபோது, லோகநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதியவர் தற்கொலை

திருச்சி தில்லைநகர் 3-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் ராஜரத்தினம் (68). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோயின் தாக்கத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி (விஷம்) மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மகன் பாரதிதாசன் கொடுத்த புகாரின்பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்