கர்நாடக முருக மடாதிபதி மீது மேலும் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகார்

கர்நாடக மாநிலம் மடாதிபதி சிவமூர்த்தி மீது மேலும் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-10-14 11:57 GMT

பெங்களூரு

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா முருக மடத்தின் விடுதியில் படிக்கும் இரண்டு மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக மடாதிபதி சிவமூர்த்தி முருக ஸ்ரீ மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக 10-ஆம் வகுப்பு பயிலும் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், அந்த மாணவிகள் மைசூரில் உள்ள சமூக சேவை அமைப்பில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த அமைப்பினர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தைக் கூறியுள்ளனர்.

இந்தப் புகாரின் பேரில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, சிவமூர்த்தி சரணகுரு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிவமூர்த்தி முருக ஸ்ரீ மீது மேலும் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளனர். ஜனவரி 2019 முதல் ஜூன் 2022 வரை முருக ஸ்ரீ தங்களை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த 4 மாணவிகளும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முருக ஸ்ரீ உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்