ஒருவீட்டில் இரண்டு கள்ளக்காதலர்கள்...! தகராறு செய்த கூலித்தொழிலாளி கொலை - வாலிபருடன் பெண் கைது

சென்னையில் குடிபோதையில் தகராறு செய்த கள்ளக்காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த பெண் மற்றும் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-09-24 11:26 GMT

சென்னை,

சென்னை மதுரவாயல் அருகே நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் விஜய்(வயது 27), கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு கணவனை பிரிந்து வசித்து வந்த சவுந்தர்யா(29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கூலித்தொழிலாளி விஜய் மர்ம நபர்கள் குத்தி கொலை செய்து விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த விருகம்பாக்கம் போலீசார் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த விஜய் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அப்பகுதி சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சவுந்தர்யாகை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல் வெளியாக உள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

சவுந்தர்யா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் துப்புரவு பனியாளாராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் விஜய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

விஜய் குடிபோதையில் தினமும் வீட்டுக்கு வந்து சவுந்தர்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் தன்னுடன் பணிபுரிந்த பிரபு (36) என்பவருடன் சந்தர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறிய நிலையில் விஜய் வீட்டில் இருக்கும் போது இரவு நேரங்களில் பிரபுவையும் வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் குடித்துவிட்டு வழக்கம்போல் சவுந்தர்யாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது விஜயை, பிரபு தள்ளிவிட்டுள்ளார். இதில் கீழே விழுந்த விஜயை கத்தியால் சரமாரியாக சவுந்தர்யா குத்தியில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் சவுந்தர்யா மற்றும் பிரவு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்