இரண்டரை லட்சம் கொசுவலைகள் தயாராக இருக்கின்றன - மேயர் பிரியா சொன்ன தகவல்

சென்னையில் கனமழை பெய்து வருவதால், கொசுவலைகள் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.;

Update: 2022-11-12 14:33 GMT

சென்னை,

சென்னையில் கனமழை பெய்து வருவதால், ஒவ்வொரு பகுதிக்கும் கொசுவலைகள் வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை திருவிக நகர் பகுதியில் உள்ளவர்களுக்கு விலையில்லா கொசுவலைகளை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர், இரண்டரை லட்சம் கொசு வலைகள் தயாராக இருப்பதாகவும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கொசுவலைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மாநகராட்சி துரிதமாக செயல்பட்டதால் சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்று குறிப்பிட்ட மேயர், சாலையோரம் வசிக்கும் 15 ஆயிரம் பேருக்கு மாநகராட்சி சார்பில் உணவு அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்