பிளஸ்-2 தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டை சகோதரர்கள்

திருப்பூரில் பிளஸ்-2 தேர்வில் இரட்டை சகோதரர்கள் ஒரே மதிப்பெண்கள் எடுத்தனர்.

Update: 2022-06-25 16:24 GMT

திருப்பூரில் பிளஸ்-2 தேர்வில் இரட்டை சகோதரர்கள் ஒரே மதிப்பெண்கள் எடுத்தனர்.

இரட்டை சகோதரர்கள்

திருப்பூர் முருகம்பாளையம் எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி அக்நெல். மோகன்ராஜ் திருப்பூர்- பல்லடம் சாலையில் நான்கு சக்கர வாகன உதிரிபாகங்களை விற்பனை செய்து வருகிறார். இவர்களுக்கு ரோகித் ராஜா, ரோஷன் ராஜா என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இருவரும் இரட்டை சகோதரர்கள். இவர்கள் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்வில் இருவரும் 417 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரே மதிப்பெண்

இரட்டை சகோதரர்கள் பிறப்பில் மட்டுமல்ல மதிப்பெண்ணிலும் கூட இரட்டையர் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான மதிப்பெண் எடுத்தது மிகவும் நெகிழ்ச்சியான, மகிழ்ச்சிகரமான சம்பவம் என்று அவர்களது பெற்றோர் மற்றும் அவர்களது ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்