இரட்டை என்ஜின் அரசு தடம் புரண்டு விட்டது - ப.சிதம்பரம் டுவீட்

இரட்டை என்ஜின் அரசு தடம் புரண்டு விட்டது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-12 09:42 GMT

சென்னை,

யூனியன் பிரதேசமான டெல்லியை ஆளும் ஆம்ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் நிர்வாகத்தில் அதிகாரம் உள்ளது என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த தீர்ப்பு குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"மஹாராஷ்டிரா ஆளுநர் செய்தது தவறு, டில்லி துணை ஆளுநர் செய்தது தவறு. மஹாராஷ்டிரா சபாநாயகர் செய்தது தவறு, புதிய கொறடாவை அங்கீகரித்தது தவறு. கட்சி தாவிய சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு எதிரான தகுதியிழப்பு மனுவில் சபாநாயகர் விரைவில் முடிவு எடுக்காதது தவறு. தவறு செய்தவர்கள் வெறும் பொம்மைகள் என்ற சந்தேகம் எழுவதால் பொம்மலாட்டுக்காரர் யார் என்ற கேள்வி எழுகிறது பொம்மலாட்டுக்காரர் பேச மாட்டார்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிக் கருத்துச் சொல்லமாட்டார்கள்

இரட்டை என்ஜின் அரசு தடம் புரண்டு விட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்