என்ஜினீயரிங் மாணவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

சுவாமிமலை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய என்ஜினீயரிங் மாணவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.;

Update: 2023-05-10 20:26 GMT

தஞ்சாவூர்;

சுவாமிமலை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய என்ஜினீயரிங் மாணவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

என்ஜினீயரிங் மாணவர்

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் பிரவீன்குமார் (வயது 23). என்ஜினீயரிங் படித்து வரும் இவர் கடந்த 2021-ம் ஆண்டில் 17 வயது சிறுமியை காதலித்து வந்தார்.அந்த சிறுமி பிரவீன்குமாருக்கு உறவுக்கார பெண் என்பதுடன் தங்கை முறை ஆவார். மேலும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் அவர் கர்ப்பமடைந்தார். இதையடுத்து கருக்கலைப்பு செய்யப்பட்டது.

25 ஆண்டுகள் சிறை தண்டனை

இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசில் சிறுமி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரித்து பிரவீன்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்