தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் டி.வி. திருட்டு
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் டி.வி. திருட்டு போனது.
ஓசூர்:-
ஓசூர் பேடரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணமூர்த்தி (வயது 40). தனியார் நிறுவன ஊழியர். இவர், தனது குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றார். நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த டி.வி. திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து லட்சுமிநாராயணமூர்த்தி சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணைநடத்தினர்.