டி.வி., செல்போன் திருட்டு

மதுரையில் பூட்டிய வீட்டில் டி.வி., செல்போன் திருடப்பட்டது.

Update: 2022-10-21 19:19 GMT

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது 50).சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து இருந்தது. மேலும் உள்ளே இருந்த டி.வி., செல்போன், எப்.எம்.ரேடியோ, தையல் எந்திரம் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்