தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கருத்தரங்கம்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2022-11-22 18:45 GMT

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உலக மீன்வள தினத்தை முன்னிட்டு எதிர்காலத்துக்கான 'வளங்குன்றா மீன்வளத்தை நோக்கிய நீலப்புரட்சிக்கான முன்முயற்சிகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் அகிலன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற முன்னாள் முதல்வர் வெங்கடரமணி, கல்லூரியின் மீன்வள உயிரியல் மற்றும் மேலாண்மை துறை தலைவர் ஜெயக்குமார், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ரஞ்சித் உள்ளிட்ட வல்லுநர்கள் கலந்து கொண்டு கடல் மீன்வளத்தின் தற்போதைய நிலை, அழிந்து வரும் மீன்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, பொறுப்பான மீன்பிடி முறை, கடல் உயிரின பல்வகைமை மற்றும் நிலையான மீன்வள மேலாண்மை போன்ற தலைப்புகளில் பேசினர். மீனவர்கள், மீனவ பெண்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மீன்வள உயிரியல் மற்றும் மேலாண்மை துறை உதவி பேராசிரியர் துரைராஜா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்