தூத்துக்குடிசைவ வேளாளர் சங்க தலைவருக்கு பாராட்டுவிழா

தூத்துக்குடி சைவ வேளாளர் சங்க தலைவருக்கு பாராட்டுவிழா நடந்தது.

Update: 2023-02-27 18:45 GMT

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க தலைவராக ஆறுமுகநேரியை சேர்ந்த ஜெ.சங்கரலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு ஆறுமுகநேரி சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு ஓய்வு பெற்ற ஸ்பிக் நிறுவன அதிகாரி இ.சங்கரன்பிள்ளை தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் கற்பகவிநாயகம், மாவட்ட செயலாளர் ஏ.பி.கே. பாலன், மாவட்ட பொருளாளர் அ.குப்புசாமி, ஆழ்வார்திருநகரி சைவ வேளாளார் அறக்கட்டளை தலைவா் ஏ.கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். முன்னதாக சங்க செயலாளா் எஸ்.கே.முருகன் வரவேற்று பேசினார்.

விழாவில் மாவட்ட கவுரவ தலைவா் பி.பாரதிசங்கா், இளைஞா் பேரவை மாநில அமைப்பாளா எஸ். குற்றாலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஆர்.ராமன் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து கிளை சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியை ஜெ.நடராஜன் தொகுத்து வழங்கினார். டி.சி.டபிள்.யு. சுப்பிரமணியபிள்ளை நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்