தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கஞ்சா விற்பனை?

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-12-14 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சிறப்பு ரோந்து மேற்கொள்ளுமாறு மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுக பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் திடீர் சோதனை நடத்தினார்.

அப்போது, அந்த பகுதி மக்களிடமும் கஞ்சா போன்ற போதை பொருள் விற்பனை தடுப்பு குறித்து கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சோதனையின் போது, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்