தூத்துக்குடி கடற்கரையில் தூய்மை பணிகள்

தூத்துக்குடி கடற்கரையில் தூய்மை பணிகள் நடைபெற்றது.

Update: 2022-09-27 18:45 GMT

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சுற்றுலாத்துறை சார்பில் தூய்மையே சேவை வாரம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வ.உ.சி. கல்லூரி மாணவர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்தனர். தொடர்ந்து தூய்மை குறித்த உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன், உதவி அலுவலர் நித்தியகல்யாணி, மாநகராட்சி கிழக்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்