தூத்துக்குடி2-ம் ரெயில்வே கேட் திங்கட்கிழமை மூடல்

தூத்துக்குடி 2-ம் ரெயில்வே கேட் திங்கட்கிழமை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-10 18:45 GMT

மதுரை-தூத்துக்குடி இடையேயான இரட்டை ரெயில்பாதை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பல்வேறு கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில் தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து கீழுர் ரெயில் நிலையம் வரையிலான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக மேலூர் ரெயில்நிலையம் மூடப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும் தூத்துக்குடி 2-வது ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளங்களை இணைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதனால் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 10 மணி முதல் 15-ந் தேதி காலை 6 மணி வரை 2-ம் கேட் முழுமையாக மூடப்பட உள்ளது. இதனால் வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்