தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில்கப்பல்களை பார்த்து ரசித்த மாணவர்கள்-பொதுமக்கள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கப்பல்களை மாணவர்கள்-பொதுமக்கள் ரசித்து பார்த்தனர்.

Update: 2023-09-05 18:45 GMT


தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நேற்று மாணவர்கள், பொதுமக்கள் கப்பல்களை பார்த்து ரசித்தனர்.

தூத்துக்குடி துறைமுகம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் துறைமுகத்தை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை முதலே பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் துறைமுகத்தில் வந்து குவிந்தனர்.

மக்கள் பார்த்து ரசித்தனர்

தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர். அவர்கள் துறைமுகத்துக்குள் சென்று பார்வையிட உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் துறைமுகத்தின் கப்பல் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு கப்பல்கள், சரக்கு பெட்டக கப்பல்களை பார்த்து ரசித்தனர். கப்பல்களில் சரக்குகள் ஏற்றப்படுவதையும், இறக்கப்படுவதையும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மாலை 4.30 மணியை தாண்டிய பிறகும் பலர் துறைமுகத்தை பார்வையிட்டனர்.

பொதுமக்கள், மாணவர்கள் துறைமுகத்தை பார்வையிட துறைமுக அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்