தூத்துக்குடி வேலவன் வித்யாலயாபள்ளி ஆண்டு விழா
தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.;
தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளிக்கூடத்தில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வேலவன் வித்யாலயா அறக்கட்டளை நிறுவனர்கள் ஆ.தங்கவேல், அன்னபுஷ்பம் மற்றும் பள்ளி தாளாளர் த.ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியும், சைபர் குற்றங்களில் இருந்து இளையதலைமுறையில் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்தும் விளக்கி பேசினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை ஷகிலா ஆனந்த் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.