தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
தூத்துக்குடி கடல் பகுதியில் அமாவாசை, பவுர்னமி நாட்களில் கடல் உள்வாங்குவதும், சீற்றம் ஏற்படுவதும் வழக்கமான நிகழ்வாக உள்ளது. அதன்படி நேற்று காலையில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி தூத்துக்குடி ரோச் பூங்கா, தெற்கு பீச்ரோடு பகுதிகளில் கடல் நீர் உள்வாங்கியது.
திடீரென கடல் உள்வாங்கியதால் அப்பகுதில் பல அடி தூரத்துக்கு மண் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதனை அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ஆச்சரியப்பட்டனர். சில மணி நேரத்துக்கு பிறகு கடல் நீர் மீண்டும் வழக்கம் போல இயல்பு நிலைக்கு வந்தது. வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் கடல் உள்வாங்கியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.