தூத்துக்குடி வடக்கு மாவட்டதி.மு.க. சார்பில்வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்டதி.மு.க. சார்பில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-01-26 18:45 GMT

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் தி.மு.க பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜெகன்பெரியசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி மண்டலத் தலைவருமான வக்கீல் பாலகுருசாமி தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் சீனிவாசன், சங்கர், மாநகர துணை அமைப்பாளர்கள் டைகர் வினோத், ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தமிழ்மொழி பாதுகாக்க தமிழ்நாடு எனப்பெயர் வர சாதி, மதம் பாராமல் வளர்த்த தமிழை, பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வழியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டிக்காத்து வருகிறார். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அமைக்கப்படுகிறது. சலவைத்துறையில் நடைபெறும் பணிகள் அனைத்தும், சட்டப்படிதான் நடக்கிறது. முறைப்படி தான் ஏலம் மூலம் கடை வாடகைக்கு கொடுக்கப்படும். அதில் ஏதும் முறைகேடு நடைபெறவில்லை. . தூத்துக்குடி வளர்ச்சிக்கு பர்னிச்சர் பார்க் மற்றும் இரண்டு தொழில் நிறுவனங்கள் வர உள்ளது. உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைகாலங்களில் 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. கல்லூரி உதவித்தொகையாக புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1000 வழங்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெறுகிற நல்லாட்சிக்கு, முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை மந்திரி வெங்கடபதி, மாநில பேச்சாளர் துரைபாண்டி, மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம். பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ஜான் அலெக்ஸாண்டர், ராஜா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், ரமேஷ், அன்பழகன், கஸ்தூரிதங்கம், அந்தோணி ஸ்டாலின், உமாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்