தூத்துக்குடி-மணியாச்சி இடையேயான சிறப்பு ரெயில் 2 நாட்கள் ரத்து
தூத்துக்குடி-மணியாச்சி இடையேயான சிறப்பு ரெயில் 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீளவிட்டான் முதல் கீழுர் ரெயில் நிலையம் வரையிலான பகுதியில் இரட்டை ரெயில் பாதை பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேலூர் ரெயில் நிலையம் பகுதியில் இன்று (புதன்கிழமை) முதல் பணிகள் தொடங்குவதால் ரெயில் நிலையம் மூடப்படுகிறது. இந்த நிலையில் ரெயில்வே என்ஜினீயரிங் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கு வசதியாக தூத்துக்குடி-மணியாச்சி இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06847), மணியாச்சி-தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில் (06848) ஆகியவை இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.