தூத்துக்குடி பதினெட்டாம் படி கருப்பசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
தூத்துக்குடி பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் கொடைவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.;
தூத்துக்குடி சண்முகபுரம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கொடைவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு மழை வளம், நாட்டின் ஒற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், கொரோனா கொடிய நோயிலிருந்து விடுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் என்று வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது.
இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட 65 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.