தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளியில்டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருஉருவப்படத்துக்கு மரியாதை
தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் பள்ளியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருஉருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.;
தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 10-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளரும், முக்காணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க தலைவரும், பள்ளி செயலாளர் மற்றும் தாளாளருமான எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர் நாடார் வழிகாட்டுதல்படி பள்ளி கமிட்டி உறுப்பினரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவருமான அ.பிரம்மசக்தி, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.