தூத்துக்குடி த.மா.கா. வேட்பாளர் அறிவிப்பு
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.;
சென்னை,
தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஈரோடு, ஶ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.
ஏற்கெனவே ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். ஈரோட்டில் விஜயகுமார் சேகர், ஸ்ரீபெரும்புதூரில் வி.என்.வேணுகோபால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் த.மா.கா. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூத்துக்குடியில் எஸ்.டி.ஆர். விஜயசீலன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் தி.மு.க. சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.