கடற்கரையில் ஒதுங்கிய அரியவகை ஆமை
உவரி அருகே கடற்கரையில் அரியவகை ஆமை ஒதுங்கியது
திசையன்விளை:
உவரியை அடுத்த கூட்டப்பனை கடற்கரையில் ஆலிவ் ரெட்லி என்ற அரிய வகை ஆமை கரை ஒதுங்கியது. அதை மீனவர்கள் அருகில் சென்று பார்த்தனர் அங்கு அந்த ஆமை 100-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டு இருந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரி மணிகண்டன் மற்றும் உவரி கடலோர காவல் போலீசார் ஆமை முட்டைகளை கடற்கரையில் பாதுகாப்பான இடத்தில் புதைத்து வைத்தனர். பின்பு ஆமையை கடலில் விட்டனர்.