எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி ரக மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 223 முதல் ரூ.7 ஆயிரத்து 653 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 734 முதல் ரூ.6 ஆயிரத்து 333 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 285 முதல் ரூ.12 ஆயிரத்து 406 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 5 ஆயிரத்து 700 மூட்டை மஞ்சள் ரூ.2 கோடியே 30 லட்சத்துக்கு விற்பனையானது.