கொந்தகை அகழாய்வு பணிகளை நேரில் பார்த்த தொல்லியல் துறை மாணவர்கள்

கொந்தகை அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை மாணவர்கள் நேரில் பார்த்து பயிற்சி பெற்றனர்.

Update: 2023-05-25 18:45 GMT

திருப்புவனம்

கொந்தகை அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை மாணவர்கள் நேரில் பார்த்து பயிற்சி பெற்றனர்.

அகழாய்வு

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றிய கீழடியில் மத்திய- மாநில அரசுகள் சார்பில் ஏற்கனவே 8 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் இங்கு கண்டறியப்பட்டு வருகின்றன.அந்த பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கீழடியில் தற்போது 9-வது கட்ட அகழாய்வு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ெதாடங்கி வைத்தார். இதை தொடர்ந்து கீழடியில் 4 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொந்தகை அகழாய்வு பணிகளை தொல்லியல் துறை மாணவர்கள் நேரில் பார்த்து பயிற்சி பெற்றனர்.

அதன் பின்பு கொந்தகையில் 9-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கப்பட்டது. கொந்தகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதுமக்கள் தாழிகளில் மனித மண்டை ஓடு, கை-கால் எலும்புகள், சிறிய பானை, சிறிய சட்டி, வாள் போன்ற பல பொருட்கள் கிடைத்தன. இங்கு கிடைத்த பொருட்கள் அனைத்தும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தொல்லியல் துறை சேர்ந்த பட்டய படிப்பு மாணவர்கள் 5 பேர் கீழடி, கொந்தகை அகழாய்வு நடைபெறும் பணிகள் குறித்தும், பொருட்களை கண்டுபிடிக்கும் நிலை குறித்தும், உயரம், அகலம், ஆழம் குறித்தும், மேலும் கணக்கீடு செய்வது பற்றியும் மற்றும் பல பயிற்சிகள் எடுப்பதற்காக வந்துள்ளனர். இவர்கள் ஒரு வாரம் தங்கி பயிற்சி பெறுகின்றனர். நேற்றும் கொந்தகையில் நடைபெற்ற பணிகளை நேரில் பார்த்து பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு கீழடி பிரிவு இணை இயக்குனர் ரமேஷ் மற்றும் தொல்லியல் அலுவலர்கள் அஜய், காவ்யா ஆகியோர் அகழாய்வு பணிகள் குறித்த விவரங்களை தெளிவாக விளக்கி கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்