காச நோய் மருத்துவ முகாம்

அரிட்டாபட்டியில் காச நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது

Update: 2023-04-29 18:45 GMT

மேலூர்,

மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் தமிழக அரசு சுகாதார துறை சார்பில் காச நோய் மற்றும் தொழு நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலூர் வட்டார சுகாதார அலுவலர் அம்பலம் சிவனேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். பின்னர் ஊர் கலையரங்கம் முன்பு பொதுமக்களுக்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அரிட்டாபட்டி பொதுமக்களும், சுகாதார நிலைய மருத்துவர்கள், ஊராட்சி தலைவர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்