காச நோய் கண்டறியும் முகாம்

கயத்தாறில் காச நோய் கண்டறியும் முகாம் நடந்தது.

Update: 2023-06-10 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் என்ற டிஜிட்டல் எக்ஸ்ரே மூலம் காச நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை முகாமை தொடங்கி வைத்தார். திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் மற்றும் கடம்பூர் காசநோய் பிரிவின் சார்பாக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவின் சார்பில் இந்த முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காச நோய் முதுநிலை சிகிச்சை பிரிவு மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன், மற்றும் சரவணன், முதுநிலை ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் தனசெல்வி, சோபியா, சுகாதார பார்வையாளர் திவ்யா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை ஆகியோர் கலந்துகொண்டனர். கயத்தாறு பேரூராட்சியில் பணிபுரியும் 58 தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்