சங்கராபுரத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சங்கராபுரத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-03-29 18:45 GMT

சங்கராபுரம், 

தேசிய காசநோய் திட்டத்தின் கீழ் காசநோய் விழிப்புணர்வு பேரணி சங்கராபுரம் அரசு மருத்துமனையில் நடைபெற்றது. இதற்கு முதன்மை மருத்துவர் அலுவலர் ராஜ்மோகன் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். இதில் தனியார் நர்சிங் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி கோஷங்கள் எழுப்பினர். மேலும் பொது மக்களுக்கு காசநோய் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். ஊர்வலமானது அரசு மருத்துவமனையில் இருந்து தொடங்கி பூட்டை மெயின் ரோடு, கல்லை மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையை வந்தடைந்தது. இதில் சுகாதார ஆய்வாளர் சரவணன், மாவட்ட காச நோய் ஒருங்கிணைப்பாளர் இளவரசன், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் துரைராஜ், ஆய்வக பரிசோதகர்கள் மகேந்திரன், ரகு கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்