அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு..!
அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். தலைவராக சி.கோபாலன், துணை தலைவராக அன்பழகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைதொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காவிரி பிரச்சனை தமிழகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. புதிய அணை கட்டும் திட்டத்துக்கு கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
கர்நாடக மாநிலத்திற்கு சென்று காவிரி பிரச்சினை குறித்து முதல்-அமைச்சர் பேசாமல் திரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.