கோவை-போத்தனூர் இடையே ரெயில் சேவை ரத்து

கோவை-போத்தனூர் இடையே ரெயில் சேவை ரத்து

Update: 2023-02-02 13:19 GMT

திருப்பூர்

கோவை-போத்தனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே 5-ந் தேதி பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் ரெயில் சேவை மாற்றியமைக்கப்பட உள்ளது. அதன்படி சொரணூர்-கோவை ரெயில் 5-ந் தேதி காலை 11.10 மணிக்கு கோவைக்கு வரும். இந்த ரெயில் போத்தனூர்-கோவை வரை 5-ந் தேதி இயங்காது. மதுரை-கோவை ரெயில் 5-ந் தேதி போத்தனூர்-கோவை வரை இயங்காது. கோவைக்கு மதியம் 12.15 மணிக்கு சேரும். கண்ணூர்-கோவை ரெயில் 5-ந் தேதி போத்தனூர்-கோவை இடையே இயக்கப்படாது.

கோவை-கண்ணூர் ரெயில் 5-ந் தேதி போத்தனூரில் இருந்து கண்ணூருக்கு ரெயில் இயக்கப்படும். போத்தனூரில் மதியம் 2.34 மணிக்கு இயக்கப்படும். கோவை-மதுரை ரெயில் 5-ந் தேதி போத்தனூரில் மதியம் 2.52 மணிக்கு புறப்படும். போத்தனூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும். கோவை-சொரணூர் ரெயில் 5-ந் தேதி மாலை 4.41 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு சொரணூர் சென்றடையும்.

இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்