பச்சிளம் ஆண் குழந்தையை விற்க முயற்சி ; தாய் உள்பட 2 பேர் கைது

நெல்லையில் பச்சிளம் ஆண் குழந்தையை விற்க முயன்றதாக தாய் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

Update: 2023-01-13 20:53 GMT

நெல்லையை சேர்ந்தவர் யோகேஸ்வரி (வயது 38). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை டவுனில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தையை, அதே பகுதியை சேர்ந்த கற்பகவள்ளி என்பவர் வேறு ஒருவருக்கு விற்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நெல்லை டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், குழந்தையின் தாய் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதன் பின்னர் குழந்தையின் தாய் யோகேஸ்வரி, கற்பகவள்ளி ஆகியோரை குழந்தையை விற்க முயன்றதாக போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்த குழந்தையை விற்க முயன்ற சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்