மக்காச்சோளத்தை காயவைக்க தயார்நிலையில் உலர்களம்

மக்காச்சோளத்தை காயவைக்க தயார்நிலையில் உலர்களம்

Update: 2022-07-04 12:01 GMT

மடத்துக்குளம்

மடத்துக்குளம் பகுதியில் மக்காச்சோளம் விவசாயிகளின் விருப்ப பயிராக உள்ளது. புதிய ஆயக்கட்டு பகுதியில் மக்காசோளம் சாகுபடி செய் யப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளங்களை உலர வைக்க ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உலர் களங்கள் உள்ளன. இவை தற்போது பராமரிப்பு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதை விவசாயிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதோடு மக்காசோளத்துக்கு உரிய விலை கிடைக்கும் வரை இங்கு உள்ள குடோன்களில் இருப்பு வைக்கலாம்.

தொடக்கத்தில் 15 நாட்கள் இருப்பு வைக்க எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. 15 நாட்களுக்குப் பிறகு, ஒரு குவின்டாலுக்கு ஒரு நாளைக்கு ஐந்து காசு மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இருப்பு வைக்கும் மக்காச்சோளத்தின் மதிப்பீட்டின் அளவில் 75 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதை மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெறலாம் என ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்