வேடசந்தூர் அருகே லாரிகள் மோதி விபத்து - டிரைவர்கள் படுகாயம்...!

வேடசந்தூர் அருகே லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2022-06-04 13:24 GMT


தூத்துக்குடியில் இருந்து கேரளாவிற்கு உப்பு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை கோட்டையத்தைச் சேர்ந்த அபுஜித்ராஜ்(வயது 31) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த லாரி திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்த போது வேடசந்தூர் அருகே தம்மனம்பட்டி பிரிவில் லாரியை சாலையோரம் நிறுத்தி டிரைவர் அபுஜித்ராஜ் வழிகேட்டு உள்ளார்.

அப்போது திண்டுக்கலில் இருந்து கரூர் நோக்கி வந்த பெட்ரோல் டேங்கர் லாரி சாலையோரம் நின்ற கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது.

இதில் டேங்கர் லாரியை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த டிரைவர் வெற்றிவேல்(22) உடன் இருந்த மாற்று டிரைவர் சிவசந்திரன்(43) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களை அப்பகுதியினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்