சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் படுகாயம்

சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-07-23 07:55 GMT

திருத்தணி, 

காஞ்சீபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இரும்பு உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா முட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் (வயது 49) என்பவர் ஓட்டிச் சென்றார்.

நேற்று விடியற்காலை 5 மணி அளவில் பொன்பாடி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் குமரவேல் படுகாயம் அடைந்தார். அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த குமாரவேலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்