150 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
150 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே மசக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 40). லாரி டிரைவர். கிளீனராக அதே பகுதியை சேர்ந்த கோகுல் (35) உள்ளார். இவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளிரூட்டப்பட்ட கண்டெய்னர் லாரி மூலம் இங்கிலீஷ் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு பெங்களூருவுக்கு சென்றனர். அங்கு காய்கறிகளை இறக்கி விட்டு, திரும்பி வந்து கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊட்டியில் இருந்து கோத்தகிரியை நோக்கி லாரி வந்த போது, பாக்கியா நகர் அருகே குறுகிய வளைவில் லாரியை திருப்ப சந்தோஷ் முயற்சித்ார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்புச்சுவர் மீது மோதி, தேயிலை தோட்டத்தில் 150 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சந்தோஷ், கோகுல் 2 பேரும் லாரியில் இருந்து வெளியே தேயிலை செடிகள் மீது குதித்தனர். இதனால் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.