ஏலகிரி மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

ஏலகிரி மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-09-15 18:43 GMT

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள கூத்தாண்ட குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் கேசவன் (வயது 20), லாரி டிரைவர். இவர் நேற்று லாரியில் செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு ஏலகிரி மலைக்கு சென்றார். அங்கு செங்கலை இறக்கிவிட்டு மீண்டும் மலை உச்சியில் இருந்து அடிவாரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஒன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பாறை மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த கிளீனர் மண்டலவாடியை சேர்ந்த நந்தகுமார் படுகாயமடைந்தார். உடனே அவ்வழியாக வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து தகவலறிந்ததும் ஏலகிரிமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார், திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் வெங்கடேசன் சாலை பணியாளர் தேவேந்திரன் மற்றும் சாலை பணியாளர்கள் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்