ரெயில் மோதி லாரி மெக்கானிக் பலி

வஞ்சூர் அருகே ரெயில் மோதி லாரி மெக்கானிக் பலியானார்.

Update: 2023-01-06 17:46 GMT

காட்பாடி வஞ்சூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 27). லாரி மெக்கானிக். இவர் நேற்று வஞ்சூர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது வந்த அரக்கோணத்தில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை செல்லும் மின்சார ரெயில் ஆனந்தன் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

இது குறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்