மரத்தில் லாரி மோதி டிரைவர் பலி
சங்கராபுரம் அருகே மரத்தில் லாரி மோதி டிரைவர் பலி
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஆற்றுமாமாந்தூரை சேர்ந்தவா் அரிபுத்திரன் மகன் முருகன்(வயது 35). டிரைவரான இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி லாரியை ஓட்டி சென்றார். சங்கராபுரம் அடுத்த மேலேரி ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்போில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.