மின்சாரம் தாக்கி லாரி அதிபர் பலி

மானூர் அருகே மின்சாரம் தாக்கி லாரி அதிபர் பலியானார்.;

Update: 2023-02-06 19:43 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள வடக்கு வாகைகுளத்தை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது 38). சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வந்தார். சம்பவத்தன்று, தான் புதிதாக கட்டி வரும் கட்டிட சுவரை தண்ணீர் விட்டு நனைக்க மோட்டார் சுவிச்சை போட்டார். அப்போது, மின் வயரில் கசிவு ஏற்பட்டு உடலில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை ஆட்டோ மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்