விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி அருகே உள்ள ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியன் இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 27). லாரி டிரைவர். இவர் பாப்பனப்பட்டு அருகே சாமியாடி குச்சிபாளையம் கூட்டு சாலை அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த லாரி டிரைவர் சிலம்பரசனுக்கு சந்தியா என்ற மனைவியும், சித்தார், அஸ்வந்த், என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.