கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி லாரி டிரைவர் சாவு

கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி லாரி டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2023-06-24 18:45 GMT

கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரன் மகன் கோதண்டராமன் (வயது 34). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இவர் அதே பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவருடன் நீலமங்கலம் மேம்பாலம் புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தின் வழியாக அங்குள்ள சுங்கச்சாவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களுக்கு பின்னால் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கோதண்டராமன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மகேந்திரன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்