மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; தி.மு.க. பிரமுகர் பலி

கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தி.மு.க.பிரமுகர் பலியானார்.

Update: 2022-08-22 17:55 GMT

கீரனூர்:

கீரனூர் அருகே ராக்கத்தம்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 55). விவசாயி. தி.மு.க.பிரமுகரான இவர் இன்று இரவு கீரனூர் திருச்சி புறவழிச்சாலையில் உள்ள துவரவயல் கிராமத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் கீரனூருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது திருச்சியில் இருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பால்ராஜ் படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் லாரி டிரைவர் திருச்சி தென்னூர் அண்ணா நகரை சேர்ந்த அசன் முகமது (41) மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்