கார் மீது லாரி மோதல்

கடையம் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.;

Update: 2023-04-16 19:00 GMT

கடையம்:

கடையம் யூனியன் முன்னாள் சேர்மனும், அ.தி.மு.க. பிரமுகருமான மாதாபுரத்தை சேர்ந்தவர் பொன்னுத்துரை. இவர் தனது குடும்பத்தினருடன் சேரன்மாதேவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

கடையம் அடுத்த வெள்ளிகுளம் அருகே கார் சென்ற போது, அந்த வழியாக ஜல்லி கற்கள் ஏற்றிக் கொண்டு கனரக லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி, கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கனரக லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்