மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலியானார்.

Update: 2022-09-06 19:12 GMT

ராணிப்பேட்டை புளியங்கன்னு பகுதியை சேர்ந்தவர்கள் மாதவன் (வயது 45), ஈஸ்வரன் (46). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆர்.கே. பேட்டையில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். திருத்தணி சாலையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு மாதவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈஸ்வரன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்