அரசு பஸ் மீது லாரி மோதல்; டிரைவர் உள்பட 4 பேர் காயம்

அரசு பஸ் மீது லாரி மோதியதில் டிரைவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.;

Update: 2023-03-26 19:12 GMT

பாடாலூர்:

பெரம்பலூரில் இருந்து திருப்பட்டூர் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இதேபோல் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி நோக்கி ஒரு சரக்கு லாரி வந்தது. அந்த லாரியை அரசு டாஸ்மாக் பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனசூர்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்(வயது 35) ஓட்டினார். நாரணமங்கலம் கிராமங்கலத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விஜயகோபாலபுரத்தை அடுத்துள்ள சாலையில் வந்தபோது முன்னால் சென்ற பஸ் மீது லாரி மோதியது. இதில் பஸ்சின் பின்பகுதி சேதமடைந்தது. மேலும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் எசனை கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(30) மற்றும் பயணிகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்