பஸ் மீது லாரி மோதல்

செஞ்சி அருகே பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-12-11 18:45 GMT

செஞ்சி, 

திருவண்ணாமலையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று காலை சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி அருகே உள்ள தாங்கள்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் லாரியின் இடிபாடுகளில் டிரைவர் முருகன் சிக்கினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுமார் ½ மணி நேரம் போராடி அவரை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் விபத்தில் காயமடைந்த பஸ் பயணிகளான சென்னை வீரபாண்டி சரத், திருவண்ணாமலை மாவட்டம் சு.பாப்பம்பாடி பாண்டுரங்கன், புஷ்பா, கோவிந்தன், செங்கம் வசந்தி உள்பட 6 பேர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்